ஆசிரியை மாலதியை கத்தியால் குத்திய மர்ம நபர் கைது 


நேற்று தனியார் பள்ளி ஆசிரியை கத்தியால் குத்தியதிவிட்டு தப்பிய மர்மநபரை இன்று காவல்துறையினர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

தேனி மாவட்டம் போடி பெரியாண்டவர் நெடுஞ்சாலை பகுதியில் வசித்து வருபவர் மாலதி(42) .இவர் போடியில் உள்ள தனியார் மேல்நிலை பள்ளியில் 10ம் வகுப்பு ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். முதல் கணவர் விவாகரத்து ஆனா நிலையில்  ஆசிரியர் மாலதி தனது இரண்டாம் கணவர் சங்கர நாராயணனுடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை பள்ளிக்கு புறப்பட்டு செல்லும் வேளையில் அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் மாலதியின் வீட்டிற்குள் புகுந்து கத்தியால் 3 இடங்களில் குத்திவிட்டு தப்பி ஓடினார். ஆசிரியரின் அலறல் சப்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் மாலதியை மீட்டு போடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து போடி நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

இந்நிலையில் சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகளை வைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வந்த காவல்துறையினர், மாலதியின் வீட்டிற்குள் புகுந்தது அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்த திருமலாபுரத்தில் வசிக்கும் மணி (24) என்ற வாலிபர் என தெரியவந்தது. இதனைதொடர்ந்து போடி நகர ஆய்வாளர் காயத்ரி, குத்திவிட்டு தப்பிய மணியை கைது செய்து விசாரணை செய்ததில் ஆசிரியரின் வீட்டிற்குள் நகைளை திருட முயற்சித்த போது அதனை தடுத்த ஆசிரியை மாலதியை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியதாக வாக்குமூலம் அளித்தார். மேலும் காவல்துறையினர் விசாரணையில் மணி போதை பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் தெரிய வந்துள்ளது.         

POST COMMENTS VIEW COMMENTS