ஆசிரியருக்கு கத்திக்குத்து...!


தனியார் பள்ளி ஆசிரியர் மீது அடையாளம் தெரியாத நபர் கத்தியால் குத்தியதில் ஆசிரியர் படுகாயம் அடைந்தார். 

தேனி மாவட்டம் போடி பெரியாண்டவர் நெடுஞ்சாலை பகுதியில் வசித்து வருபவர் மாலதி(42) .இவர் போடியில் உள்ள தனியார் மேல்நிலை பள்ளியில் 10ம் வகுப்பு ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். முதல் கணவர் விவாகரத்து ஆனா நிலையில்  ஆசிரியர் மாலதி தனது இரண்டாம் கணவர் சங்கர நாராயணனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை பள்ளிக்கு புறப்பட்டு செல்லும் வேளையில் அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் மாலதியின் வீட்டிற்குள் புகுந்து கத்தியால் 3 இடங்களில் குத்திவிட்டு தப்பி ஓடினார்.

ஆசிரியரின் அலறல் சப்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் மாலதியை மீட்டு போடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து போடி நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனைதொடர்ந்து மாலதிக்கு முதுகில் காயம் ஆழமாக இருக்கும் காரணத்தால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மேலும் காவல்துறையினர்  இச்சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகளை வைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

POST COMMENTS VIEW COMMENTS