ஜாமீனில் வெளிவந்தவருக்கு நேர்ந்த சோகம்: தொடரும் கொடூரம்..!


விருதுநகரில் ஜாமீனில் வெளிவந்த இளைஞரை 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டியைச் சேர்ந்த மைதீன் பாட்ஷா அருகில் வசிக்கும் நபர்களுடன் தகராறு செய்த புகாரில் கைது செய்யப்பட்டார். பத்து நாட்களுக்கு முன்னர் ஜாமீனில் வெளிவந்த மைதீன் பாட்ஷா, அல்லம்பட்டி ரயில்வே பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரை சூழ்ந்து கொண்ட 5 பேர் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினர். இதில் படுகாயமடைந்த மைதீன் பாட்ஷா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

ஏற்கனவே விருதுநகரில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய முத்துக்காமாட்சி என்பவர் ஜாமீனில் வெளிவந்த போது கடந்த மே மாதம் 7-ம் தேதி கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

POST COMMENTS VIEW COMMENTS