சிறுமியை போதைக்கு அடிமையாக்கி பாலியல் வன்கொடுமை: 6 பேர் கைது!


திருவள்ளூரில் 15 வயது சிறுமியை போதைக்கு அடிமையாக்கி பாலியல் வன்கொடுமை செய்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவள்ளூரில் கோடை விடுமுறையின்போது தோழி வீட்டிற்கு சென்ற 10ம் வகுப்பு மாணவி வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். 

சிறுமியை தேடிய காவல்துறையினர் அதேபகுதியில் மதுபோதையில் தள்ளாடியப்படி கோவில் அருகே பெண்ணை மீட்டனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதில், திருவள்ளூரைச் சேர்ந்த ராஜேஷ், நவீன்குமார் உள்பட 6 பேர் சிறுமிக்கு மது மற்றும் கஞ்சா கொடுத்து போதைக்கு அடிமையாக்கி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேரையும் கைது செய்து மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில் தொடர்புடைய மேலும் சிலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

POST COMMENTS VIEW COMMENTS