நிச்சயமான பெண்ணை கடத்த முயன்ற காதலர்: சிக்கலான காதலால் சிக்கிய இளம்பெண்!


திருமணம் நிச்சயமானப் பெண்ணை, அவரது முன்னாள் காதலன் கடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

கேரளாவில் உள்ள உடும்பனுரைச் சேர்ந்தவர் உமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சாப்ட்வேர் இன்ஜினீயர். இவரது காதலர் சிவா (பெயர் மாற்றப் பட்டுள்ளது). இருவரும் சில வருடங்களாகக் காதலித்து வந்தனர். இந்நிலையில் சிவாவுக்குத் துபாயில் வேலை கிடைத்து, அங்கு சென்று விட்டார். பெங்களூரில் வேலை கிடைத்தது உமாவுக்கு. அங்கு சென்ற உமாவுக்கு அறிமுகமானார், சுரேஷ். இவர் கேரள மாநிலம் எரட்டுப் புழாவைச் சேர்ந்தனர். அறிமுகம் நட்பாகி, நட்பு காதலானது. இருவரும் காதலித்து வந்தனர். சுரேஷ் வேலை பார்த்த நிறுவனம் அவரை குஜராத்துக்குத் திடீரென மாற்றியது. அங்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது சுரேஷுக்கு. அங்கு சென்றாலும் காதல் தொடர்ந்தது இருவருக்கும். 

இந்நிலையில் துபாயில் இருந்த முதல் காதலன் பெங்களூரு வந்தார். உமாவிடம் திருமணம் செய்துகொள்ளலாம் என்று சொன்னதும், சம்மதித்தார் உமா. பிறகு இரண்டு குடும்பங்களும் பேசி, திருமண நிச்சயதார்த்தத்தை முடித்தது. இது நண்பர்கள் மூலம் குஜராத்தில் இருந்த சிவாவுக்குத் தெரிய வந்ததும் கொதித்தார். உடனடியாக அடுத்த பிளைட்டை பிடித்தார் கேரளாவுக்கு. இந்நிலையில் உமா தனது மற்றும் வருங்கால கணவர் குடும்பத்தினரோடு திருமணத்துக்கான துணிமணிகள் எடுக்க கொச்சியில் உள்ள பிரபல துணிக்கடைக்கு வந்திருந்தார். கொச்சி விமான நிலையத்தில் இறங்கிய சுரேஷுக்கு தகவல் தெரிய வந்தது. உடனடியாக தயாராக இருந்த நண்பர்களுடன் அங்கு சென்ற சுரேஷ், உமாவைக் கடத்திச் செல்ல முயன்றார். 

இதைக் கண்ட உமாவின் சகோதரரும் வருங்கால கணவர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து அதை தடுக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அந்தப் பகுதியில் டிராபிக் ஜாம் ஏற்படும் அளவுக்குப் பிரச்னை பெரிதானதால் போலீசார் விரைந்து வந்தனர். அவர்களை அழைத்து வந்து விசாரித்த பின் இவ்வளவு விவகாரமும் வெளியே வந்தது.  பின்னர் பெண்ணைக் கடத்த முயன்றதாக சுரேஷ் மற்றும் அவர் நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

POST COMMENTS VIEW COMMENTS