இளம்பெண்ணிடம் குரூரமாக நடந்து கொண்ட ஓட்டுநர்


விமான நிலையம் சென்ற இளம் பெண்ணை மிரட்டி நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்த ஓலோ டிரைவர் கைது செய்யப்பட்டார். பெங்க ளூரில் நடந்த இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூர் ஜேபி நகரைச் சேர்ந்தவர் சுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வயது 26. ஆர்கிடெக்ட்டான இவர், கடந்த 1-ம் தேதி வேலை விஷய மாக மும்பை செல்ல வேண்டியிருந்தது. அதிகாலையில் விமான நிலையம் செல்வதற்காக, ஓலா காரை புக் செய்தார். வினோத் என்ற டிரைவர் காருடன் வரும் தகவல் வந்தது. காலை 2 மணியளவில் கார் வந்தது. ஏறினார். 

சுதா, தனியாக இருப்பதைக் கண்டதும் டிரைவர் வினோத்துக்கு அவர் மீது மோகம் ஏற்பட்டது. இந்நிலையில் கார் திடீரென்று வேறு வழியி ல் செல்வதைக் கவனித்த சுதா, ’ஏன் இப்படி போறீங்க?’ என்று கேட்டார். இந்த வழியாகச் சென்றால் சீக்கிரம் ஏர்போர்ட் போய் விடலாம் என்றார் வினோத். சிறிது தூரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத இடமாகப் பார்த்து, காரை நிறுத்தினான் வினோத். கார் கதவை லாக் செய்து விட்டு, சுதாவின் செல்போனை பறித்தான். பின் சில்மிஷத்தில் ஈடுபட்டான். சுதா, கத்தி ஆட்களை கூப்பிடுவேன் என்றார். கத்தினால் என் நண்பர்களை அழைத்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்வேன் என்று மிரட்டினான் வினோத். இதனால் செய்வதறியாமல் தவித்த,சுதா, தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சினார். 

பின்னர் சுதாவிடம், உடைகளை கழற்றச் சொன்னான். மறுத்தார் அவர். உடனே கொன்று விடுவேன் என்று கழுத்தைப் பிடித்தான் வினோத். பிறகு ஆடைகளை களைந்து நிர்வாணமாகப் புகைப்படம் எடுத்தான். அவசரமாக மும்பைச் செல்ல வேண்டும் என்று சுதா கெஞ்சி கதறினார். நிர்வாணப் புகைப்படம் எடுத்து முடித்த பின், ’இதை வெளியில் சொன்னால், உனது படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடு வேன்’ என்று மிரட்டினான் வினோத். பிறகு அவரை விமானநிலையம் அருகில் விட்டுவிட்டுச் சென்றுவிட்டான்.

இதையடுத்து விமான நிலையம் சென்ற சுதா, உடனடியாக லேப்டாப்பை திறந்து போலீஸ் கமிஷனருக்கு மெயிலில் புகார் அனுப்பினார். போலீசார் விசாரணை நடத்தி வினோத்தை கைது செய்தனர். அவர் காரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

POST COMMENTS VIEW COMMENTS