குழந்தைக் கடத்தல் பீதியால் அப்பாவி இளைஞரை கட்டி வைத்து உதைத்த ஊர்மக்கள்


திருப்பூர் அருகே குழந்தை திருடன் என்ற சந்தேகத்தால் இளைஞர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் சின்னாண்டிபாளையம் கிராமத்தில் சந்தேகத்துக்கிடமாக ஒருவர் சுற்றித்திரிந்தார். சந்தேகத்துக்கிடமாக சுற்றித்திரிந்தவரிடம் சின்னாண்டிபாளையம் கிராம மக்கள் விசாரித்த போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததாகத் தெரிகிறது.

இதையடுத்து குழந்தைகளை திருட வந்துள்ளதாக சந்தேகமடைந்த பொதுமக்கள், அந்த இளைஞரை கம்பத்தில் கட்டிவைத்து அடித்து உதைத்துள்ளனர். குழந்தைத் திருடன் என்ற பெயரில் பலபேர் மீது தாக்குதல் நடத்தப்படும் இம்மதிரியான சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

POST COMMENTS VIEW COMMENTS