ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: டிக்கெட் பரிசோதகர் கைது


வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில், ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த ரயில் டிக்கெட் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோயம்புத்தூரில் இருந்து சென்னை நோக்கி வந்த சேரன் விரைவு ரயிலில் நேற்று பயணிகளிடம் டி.டி.ஆர் அனிஷ்குமார், டிக்கெட் பரிசோதனை செய்துள்ளார். ரயில் காட்பாடி அருகே வந்தபோது, உறங்கிக்கொண்டு இருந்த 6 வயது சிறுமிக்கு அனிஷ்குமார் பாலியல் தொல்லை தந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் டிக்கெட் பரிசோதகர் அனிஷ்குமாரை ஜோலார்பேட்டை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

POST COMMENTS VIEW COMMENTS