வேலூர் அருகே ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு கத்திக்குத்து 


பேர்ணாம்பட்டு அருகே அரசு பேருந்தில் பயணம் செய்த நபருக்கும் ஓட்டுநருக்கும் ஏற்பட்ட மோதலால் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பேர்ணாம்பட்டுவில் இருந்து கர்நாடாக மாநிலம் வீ.கோட்டா சென்ற தமிழக அரசு பேருந்துதில் மூர்த்தி என்பவர் தனது மனைவியுடன் பயணம் செய்தார். அப்போது பேருந்து ஓட்டுநர் சிவகுமாருக்கும் மூர்த்திக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் ஓட்டுநர் சிவகுமார் மற்றும் நடத்துநர் தேவராஜை கத்தியால் குத்திவிட்டு மூர்த்தி தப்பியோடிவிட்டார். இதனையடுத்து சிவகுமார் மற்றும் தேவராஜ் பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில்  ஓட்டுனர் சிவகுமாருக்கு 20 தையல்கள் போடப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனைத்தொடர்ந்து கத்தியால் குத்திவிட்டு தப்பி ஒடிய மூர்த்தியை பேர்ணாம்பட்டு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

POST COMMENTS VIEW COMMENTS