பாலியல் வன்கொடுமை செய்து 8 பெண்களைக் கொன்ற கொடூரன்!


பாலியல் வன்கொடுமை செய்து சுமார் 8 பெண்களை கொன்ற கோவையை சேர்ந்த சைக்கோ இளைஞரை பெங்களூர் போலீசார் கைது செய் துள்ளனர்.

பெங்களூரு அருகில் உள்ள யஷந்த்புர் மற்றும் பீன்யா பகுதியில் இரண்டு இளம் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப் பட்டனர். அவர்கள் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இதே ஸ்டைலில் மேலும் சில பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப் பட்டுக் கொல்லப்பட்டனர். யாரோ சைக்கோவால்தான் இப்படிப்பட்ட சம்பவம் நடக்கிறது என பரபரப்பாகப் பேசப்பட்டது. போலீசார் இதுபற்றி விசாரித்து வந்தனர்.  குற்றவாளி யார் என்று அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் பலரிடம் விசாரித்ததை வைத்தும் அக்கம் பக்கத்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் குற்றவாளியை அடையாளம் கண்டு, தேடி வந்தனர். பின்னர் அவன் வசிக்கும் இடத்தை போலீசார் கண்டுபிடித்து, நடவடிக்கைகளை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, பெங்களூரு புறநகர் பகுதியில் சுற்றி வளைத்து அவனை கைது செய்தனர். 

அவன் பெயர் துரை என்பதும் கோயமுத்தூரைச் சேர்ந்தவன் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. போலீசார் மேலும் விசாரித் து வருகின்றனர். 8 பெண்களை இப்படி பாலியல் வன்கொடுமை செய்து அவன் கொன்றிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவங்களை பெங்களூரு, கர்நாடகாவின் பிற மாவட்டங்கள் மற்றும் மற்ற மாநிலங்களில் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

‘விசாரணை தொடர்ந்து நடந்துவருகிறது. இன்னும் எத்தனை பெண்களை கொன்றுள்ளான் என்றும் எங்கெங்கு அவன் இந்தக் கொடூர சம்பவத் தில் ஈடுபட்டான் என்பதையும் விசாரித்து வருகிறோம். இப்போதைக்கு வேறு எதுவும் சொல்ல முடியாது’ என்று போலீசார் தெரிவித்துள்ள னர்.  

இந்தச் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS