மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவர் தப்பியோட்டம்


மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சென்னை தாம்பரம் அடுத்த சோமங்கலம் புதுநல்லூர் பகுதியில் வசித்து வந்த தம்பதி சதீஷ்- பானுப்பிரியா. காதலித்து திருமணம் செய்தவர்கள். திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிய நிலையில் தம்பதியினருக்கு இன்னும் குழந்தை இல்லை. இதனிடையே கடந்த சில நாட்களாக சதீஷ் வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு தகராறு செய்த வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பணிக்கு சென்று வீடு திரும்பிய மனைவி பானுப்பிரியாவை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு சதீஷ் தப்பியோடிவிட்டார்.

இதனிடையே பானுப்பிரியாவின் தாய் வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது மகள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளனார். இதுகுறித்து சோமங்கலம் போலீசாரிடம் அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து தப்பியோடிய சதீஷை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

POST COMMENTS VIEW COMMENTS