திருவள்ளூர் வங்கி கொள்ளை: 12 மணி நேரத்தில் சிக்கிய கொள்ளையர்கள் !


திருவள்ளூரில் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்
தொடர்பாக வங்கி ஊழியர் உள்பட மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். திருவள்ளூரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் 6 கோடி‌ ரூபாய் மதிப்பிலான அடகு வைக்கப்பட்ட தங்‌க நகைகள் நேற்று கொள்ளையடிக்கப்பட்டது.‌ இதையடுத்து‌ அங்கு‌ சென்ற காவலர்கள், வங்கியின்‌ உள்ளே சென்று பார்த்தபோது‌, பாதுகாப்பு
பெட்டகத்தில் இருந்த 6 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை திருடிப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. வங்கியின் பூட்டும், பாதுகாப்பு பெட்டகமும், கள்ளச்சாவி பயன்படுத்தி திறக்கப்பட்டிருந்த நிலையில்‌, வங்கி ஊழியர்கள் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வழக்கு பதிந்துள்ள காவல்துறையினர், வங்கி ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலும் விசாரணை நடைப்பெற்றது. மேலும், இந்த வங்கிக்கொள்ளையை கண்டுப்பிடிக்க தனிப்படையும்
அமைக்கப்பட்டது. இதனையடுத்து இந்தக் கொள்ளையில் ஈடுபட்ட வங்கி ஊழியர் விஸ்வநாதன் உள்பட மூன்று பேரை தனிப்படையினர் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து 32 கிலோ தங்க நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாக திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. சிபி சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். மேலும் 12 மணி நேரத்தில் கொள்ளையர்களை போலீஸார் பிடித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 

POST COMMENTS VIEW COMMENTS