இளம்பெண்ணை கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி


கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இளம்பெண் கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நகர் என்ற கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகள் அசோனா. விருத்தாசலத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். வழக்கம் போல இன்று அலுவலகத்திற்கு சென்றுகொண்டிருந்த அவரை இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்த இருவர், பிளேடால் கழுத்தை அறுத்து கொல்ல முயன்றனர்.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் அந்தப் பெண்ணை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், யார் இந்தக் கொலை முயற்சியில் ஈடுபட்டது என்பது குறித்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர். அப்பகுதியில் சிசிடிவி கேமராக்கள் ஏதேனும் இருக்கிறதா? அதில் ஏதேனும் காட்சிகள் கிடைக்குமா எனவும் ஆராய்ந்து வருகின்றனர்.

POST COMMENTS VIEW COMMENTS