மருமகளை மிரட்டி 2 மாதமாக பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது!


டெல்லி அருகே மருமகளை மிரட்டி 2 மாதமாக பாலியல் வன்கொடுமை செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வடக்கு டெல்லியில் உள்ள கோட்வாலியை சேர்ந்தவர் ரமேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது உறவினர்கள் ஒரு விபத்தில் இறந்துவிட்டனர். இதனால் அவர்களின் பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தார் ரமேஷ். அந்த சிறுமியை 2 வயதில் இருந்தே வளர்த்து வருகிறார் ரமேஷ். சிறுமிக்கு இப்போது 14 வயதாகிறது. உறவுமுறைப்படி சிறுமி, ரமேஷூக்கு மருமகளாம்.

கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி போதையில் வீட்டுக்கு வந்துள்ளார் ரமேஷ். அவர் மனைவி ஊருக்குச் சென்றிருந்தார். அப்போது, சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்தச் சம்பவத்துக்கு பிறகு யாரிடமும் சொல்லக் கூடாது என்று கூறி, இரண்டு மாதமாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதுபற்றி தனது தோழியிடம் சொல்லியிருக்கிறார் சிறுமி. அதிர்ச்சி அடைந்த தோழி, போலீசில் தெரிவித்தார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் ரமேஷை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
 

POST COMMENTS VIEW COMMENTS