சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை 


ஆந்திர மாநிலம் சித்தூரில் 11 வயது சிறுமியை 3 மாதங்களாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த 2 சிறுவர்களை பொதுமக்கள் கட்டி வைத்து உதைத்துள்ளனர்.

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் பூங்கனூர் பகத்சிங் காலனியைச் சேர்ந்த 11 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த சண்டி, அரவிந்த், சாய்புல்லா, மன்சூர், சையது ஆகிய 5 மைனர் இளைஞர்கள் சிறுமியை மிரட்டி கடந்த 3 மாதங்களுக்கு மேலாக பாலியியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர். இதுகுறித்து சிறுமியின் தயாருக்கு நேற்று தெரிந்த நிலையில் சிறுமியை அதே பகுதியில் உள்ள மசூதிக்கு அழைத்து சென்று முறையிட்டனர். 

இதையடுத்து அங்கிருந்த மத பெரியவர்கள் அனைவரும் பகத்சிங் காலனிக்கு சென்று மைனர் பெண்னை பாலியியல் பலாத்காரம் செய்த இளைஞர்களை பிடிக்க முயன்றனர். இதில் இரண்டு இளைஞர்களை பிடித்து பொது மக்கள் அடித்து உதைத்தனர். இந்தத் தகவல் அறிந்த பூங்கனூர்  போலீசார் அந்த இளைஞர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் 3 இளைஞர்களையும் போலீசார் கைது செய்தனர். 

இருப்பினும் பொது மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரவு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் பொது மக்களை சமாதானப்படுத்தி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்று தருவதாக உறுதியளித்ததையடுத்து பொது மக்கள் கலைந்து சென்றனர். இருப்பினும் பகத்சிங் நகரில் பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS