தகராறில் இளைஞர் கழுத்தறுத்து படுகொலை 


விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விருதுநகர் மாவட்டம் சிவகாசியிலுள்ள போஸ்காலனியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரது மகன் அருண்குமார். அந்தப் பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அருகில் உள்ள மதுபானக் கடையில் மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதை மனதில் வைத்துகொண்டு இன்று இரவு அடையாளம் தெரியாத சில நபர்கள் அருண்குமாரை தனிமையில் அழைத்துச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

அப்போது மோதல் முற்றியதில், அருண்குமாரை அடையாளம் தெரியாத நபர்கள் கையில் வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுந்து படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடினர். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிவகாசி கிழக்கு காவல்நிலைய போலீசார் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய குற்றவாளிகளை போலீசார் தேடிவருகின்றனர். 

POST COMMENTS VIEW COMMENTS