மணல் கொள்ளையில் ஈடுபட்ட ஆட்டோவை விரட்டிப்பிடித்த வட்டாட்சியர்


வேலூர் மாவட்டம் பாலாற்றில் தொடர்ந்து பல்வேறு வழிகளில் மணல் கொள்ளை நடந்து வருகிறது. மாட்டு வண்டி மற்றும் டிராக்டர் மூலம் மணல் கடத்தலில் ஈடுபடுவோரை பிடிக்கும் போது  ரூ 25000 வரை அபராதமாக விதிக்கப்படுகிறது. இதனால் மணல் கொள்ளையர்கள் அடிமாட்டு விலைக்கு ஆட்டோ போன்ற பழைய வாகனங்களை வாங்கி அதன் மூலம் மணல் கடத்தி வருகின்றனர். போலீசார் மற்றும் அதிகாரிகளிடம் பிடிபடும் போது அபராத தொகையை காட்டிலும் வாகனத்தின் விலை குறைவு என்பதால் இவ்வழியை கடைபிடித்து வருகின்றனர். 

இந்நிலையில் அண்மையில் வேலூர் கிரீன் சர்கிலில் ஆட்டோவில் மணல் கடத்திச்சென்ற ஆட்டோவை அவ்வழியாக வந்த வேலூர் வட்டாட்சியர் பாலாஜி விரட்டிச்சென்று மடக்கிப் பிடித்துள்ளார். அப்போது போலீசார் மற்றும் அதிகாரிகளை பார்த்தவுடன் ஆட்டோவில் மணல் மூட்டைகளை ஏற்றி வந்த அடையாளம் தெரியாத இளைஞர்கள் மணல் மூட்டைகளை விட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர். மணல் கடத்தி வந்த 2 இளைஞர்கள் தப்பியோடிய நிலையில் ஆட்டோவை  வட்டாட்சியர் பாலாஜி பறிமுதல் செய்துள்ளார். 

POST COMMENTS VIEW COMMENTS