நள்ளிரவில் தட்டப்படும் கதவுகள்: தீரன் படபாணியில் கொள்ளை


திருவள்ளூரில் வீட்டில் தாழ்ப்பாள் போட்டு தூங்கிக் கொண்டிருந்த தனியார் ஆடிட்டர் வீட்டின் கதவை உடைத்து கணவன் மனைவி இருவரையும் கட்டிப்போட்டு 150 சவரன் நகை. 2 செல்போன்கள் மற்றும் தப்பிச் செல்ல ஹோண்டா சிட்டி காரையும் கொள்ளையடித்த முகமூடி கொள்ளையர்கள்.

திருவள்ளூர் மாவட்டம் ராஜாஜிபுரம் பத்மாவதி நகரில் வசிப்பவர் ராமச்சந்திரன்.இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி ரஜிதாவுடன் இரவு வழக்கம் போல் கதவை தாழ்ப்பாள் போட்டு தூங்கிக் கொண்டிருந்தனர்.இவரது மகன் மேல்தளத்தில் உறங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவில் சிலர்வேகமாக கதவு தட்டும் சத்தம் கேட்டுள்ளது.இதனையடுத்து ராமச்சந்திரன் கதவை திறப்பதற்காக சென்றுள்ளார்.அப்போது கதவை உடைத்துக்கொண்டு வீட்டிற்குள் புகுந்த 5பேர் கொண்ட கும்பல் ராமச்சந்திரனை கடுமையாக தாக்கியுள்ளனர்.சத்தம் கேட்டு எழுந்து வந்த அவரது மனைவி ரஜிதாவையும் அந்தக் கும்பல் தாக்கியுள்ளனர். இதனையடுத்து இருவரையும் கட்டிப்போட்டு விட்டு வீட்டில் இருந்த சுமார் 150 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

ராமச்சந்திரன் வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹோண்டா சிட்டி காரின் சாவியை வாங்கிக்கொண்ட அந்த கும்பல் அதில் தப்பிச்சென்றுள்ளனர். இரவு முழுவதும் ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி இருவரும் கைகள் கட்டிய நிலையிலே இருந்துள்ளனர்.காலையில் மேல்தளத்தில் இருந்து வந்த அவரது மகன் தந்தை தாய் கட்டிப்போட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து திருவள்ளூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போரலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோப்ப நாய் ராம்போ வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.திருவள்ளூர் எஸ்பி சிபி சக்கரவர்த்தி நேரில் விசாரணை நடத்தி வருகிறார். கொள்ளை கும்பல் முகமுடி அணிந்து வந்ததாக காவல்துறையினரிடம் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS