இளம்பெண்ணுக்கு தூக்கத்தில் பாலியல் வன்கொடுமை !


அடையாளம் தெரியாத நபர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக சென்னையை சேர்ந்த இளம்பெண் புகார் மனு அளித்துள்ளார்.

சென்னை அண்ணாநகரை அடுத்த பாடி பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண் சுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தன்னை அடையாளம் தெரியாத நபர் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக சென்னை ஜெஜெ நகர் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், “ நான் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறேன். கடந்த 3 ஆண்டுகளாக வீட்டில் தனியாகத் தான் வசித்து வருகிறேன். நேற்று பணியை முடித்துவிட்டு நள்ளிரவு வீடு திரும்பினேன். பின்னர் சாப்பிட்டுவிட்டு வீட்டில் அசந்து தூங்கிக் கொண்டிருந்தேன். அப்போது வீட்டிற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி என்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிவிட்டார்” என தெரிவித்துள்ளார்.

 

இதனிடையே அந்த நபரை தான் முன்பின் பார்த்தது இல்லை என அப்பெண் கூறியுள்ளதால், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியுள்ள போலீசார் அதுதொடர்பாக தங்களது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS