நோட்டமிட்ட திருடர்கள் - காட்டிக்கொடுத்த சிசிடிவி


கோவை அருகே தனியார் மில் உரிமை‌யாளர் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற இருவரை‌ சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

கோவையை அடுத்த சோமனூரை சேர்ந்தவர் பழனிசாமி. மில் உரிமையாளரான இவர் சோமனூர் ரயில்வே பாலம் அருகே உள்ள குடியிருப்பில் மனைவி மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். நள்ளிரவில் இவர்களின் இல்லத்தை நோட்டமிட்ட இரண்டு இளைஞர்கள் பின்பக்க கதவை உடைக்க முயற்சித்துள்ளார். சத்தம் கேட்டு பழனிசாமி எழுந்துள்ளார். இதனைக் கண்ட அந்த இளைஞர்கள் கதவு உடைக்கும் முயற்சியை கைவிட்டனர். அதன் பின்னர் வீட்டில் பந்தலை பிரிந்து அதன் மூலம் உள்ளே இறங்க முயற்சி செய்துள்ளனர். இதனைக்கண்ட பழனிசாமி திருடன் திருடன் என கூச்சலிட்டுள்ளார். அவரது சத்ததை கேட்ட அந்த திருடர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுதொடர்பாக கருமத்தப்பட்டி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் வந்து விசாரணை மேற்கொண்டனர்.

கொள்ளையர்கள் வீட்டை நோட்டமிடுவதும் வீட்டிற்கும் இறங்க முயற்சித்த காட்சிகள் எல்லாம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் இருவரையும் தேடி வருகின்றனர்.

POST COMMENTS VIEW COMMENTS