போதையில் கோஷ்டி தகராறு, 2 பேர் வெட்டிக்கொலை: ராமநாதபுரம் அருகே பதற்றம்!


ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை பகுதியில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.

வாலாந்தரவை பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று நடந்த திருமண விழாவில் பங்கேற்பதற்காக, அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் வெளியூரில் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு மது போதையில் இரு கோஷ்டியினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றி கைகலப்பாக மாறியது. ஒருவரை ஒருவர் ஆயுதங்களால் தாக்கிக்கொண்டனர். இதில் அதே பகுதியைச் சேர்ந்த பூமிநாதன், விஜய் ஆகிய இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். மேலும் சலீம் என்பவர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். 
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாலாந்தரவையில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் டிஐஜி காமினி தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS