பெற்ற குழந்தையை மிதித்து கொன்ற தாய் கைது


சென்னையில் பெற்ற குழந்தையை, தாயே மிதித்துக் கொன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது. கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால் குழந்தையைக் கொன்ற அந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை டிபி சத்திரம் பகுதியில் வசித்து வருபவர் பிரியங்கா. இவர் கணவர் வேலு. கருத்து வேறுபாடு காரணமாக பிரியங்காவை விட்டு சென்றுவிட்டார். இதனையடுத்து பிரியங்கா தினேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டதாக தெரிகிறது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தினேஷும் அவரை விட்டு சென்றுவிட்டார்.

இந்நிலையில் தனது இரண்டு குழந்தைகளுடன் முதல் கணவர் வேலுவுடன் மீண்டும் வசித்துவந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு ஒன்றரை வயது குழந்தை மூக்கில் ரத்தம் வலிந்து மயங்கிய நிலையில் கிடந்தது. 

குழந்தையை சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். குழந்தையின் உடலில் காயங்கள் இருந்ததால் இது தொடர்பாக டிபி சத்திரம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில், குழந்தை மிதித்து கொல்லப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக டிபி சத்திரம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். 

முதல் கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால் கோபத்தில் குழந்தையை மிதித்ததை பிரியங்கா ஒப்புக்கொண்டார். குழந்தையைக் கொன்ற பிரியங்காவையும், உடந்தையாக இருந்த வேலுவையும் காவல்துறையினர் கைது செய்தனர். பெற்ற தாயே குழந்தையை மிதித்துக் கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவரது இரண்டாவது குழந்தையின் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS