காதலியின் கணவனை 20 முறை கத்தியால் குத்திய காதலன்!


முன்னாள் காதலியின் கணவனை சரமாரியாகக் கத்தியால் குத்திய காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.

மகாராஷ்ட்ர மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள புஷாவல் பகுதியைச் சேர்ந்தவர் சமீர் மிர்ஸா (24). இவர் தானேவில் உள்ள ஓர் உணவுக் கூடத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது அங்கு பணியாற்றிய பாத்திமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது)வுடன் பழக்கம் ஏற்பட்டது. பின் அது காதலாக மாறியது. இருவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் பாத்திமாவுக்கு பெரோஸ் சேக் (29) என்பவருடன் திருமணம் நடந்துவிட்டது. இதையடுத்து பாத்திமா கணவர் ஊரான விரார் பகுதிக்குச் சென்றார். 

பாத்திமாவுக்கு திருமணமாகிவிட்டாலும் அவரை மறக்க முடியவில்லை மிர்ஸாவுக்கு. அவருடன் பழக்கத்தைத் தொடர்ந்தார். கணவர் இல் லாத நேரம் இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த புதன்கிழமை இரவு கத்தியுடன் விராருக்கு சென்ற மிர்ஸா, காதலி யின் வீட்டருகே காத்திருந்தார். அப்போது ஷேக் வீட்டுக்குப் போவது தெரியவந்தது. வேகமாக ஓடிய மிர்ஸா, அவரை இழுத்து, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாகக் குத்தினார். 20 முறை குத்திய மிர்ஸா, பிறகு அங்கிருந்து தப்பியோடினார். இந்நிலையில் ஷேக் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது நிலைமைக் கவலைக்கிடமாக உள்ளது.
இதையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், பாத்திமாவின் காதலரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் பாத்திமாவின் பங்கு ஏதும் இருக்கிறதா என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 

POST COMMENTS VIEW COMMENTS