பாலியல் தொல்லையால் சுய நினைவை இழந்த சிறுவன்: வைத்தியர் கைது


ஆவடி அருகே 7-ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வைத்தியர் கைது செய்யப்பட்டார்.

சென்னை ஆவடி அடுத்த அரிக்கமேடு லக்ஷ்மி நகர் பகுதியில் ஆரிய வைத்தியசாலை நடத்தி வருபவர் வைத்தியர் ராதாகிருஷ்ணன். இவர் கடந்த 27-ஆம் தேதி  தனது வைத்திய சாலை அருகே விளையாடி கொண்டு இருந்த 7 ஆம் வகுப்பு மாணவனை தலை முடிக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி வைத்தியசாலைக்கு அழைத்து சென்றிருக்கிறார். பின்னர் மாணவனுக்கு சிகிச்சை அளிக்காமல் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் வைத்தியர்.

இதனால் நினைவு இழந்த மாணவன் கடந்த 15 தினங்களாக சுய நினைவு இழந்து பித்து பிடித்தது போல இருந்து வருகிறார். இதையடுத்து விவரம் அறிந்த மாணவனின் பெற்றோர், ஆரிய வைத்தியசாலை வைத்தியர் ராதாகிருஷ்ணன் மீது ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்,  போக்சோ சட்ட பிரிவில் ராதா கிருஷ்ணனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

POST COMMENTS VIEW COMMENTS