சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: காவல்துறையை கண்டித்து போராட்டம்


5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுவன் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ்
வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் போடி தேவாரம் வடக்கு தெருவை சேர்ந்த 15 வயது சிறுவன் அசோக் பிரபாகர். தொழிலாளியாகப்
பணி புரிந்து வருகிறார். நேற்று இரவு சாலை தெருவை சேர்ந்த 5 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி தோட்டப்
பகுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியின் அலறல் சப்தம் கேட்டு அருகில் இருந்தோர்  
சிறுவனை பிடித்து தேவாரம் காவல்துறையினாரிடம் ஒப்படைத்துள்ளனார். பாதிக்கப்பட்ட 5 வயது சிறுமியை மீட்டு,
மருத்துவ சிகிச்சைக்காக உத்தமபாளைம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். 

இந்நிலையில் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சிறுமியின் உறவினர்கள் காவல்துறையில் புகார்
தெரிவித்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் அலட்சியம் காட்டியதால், சிறுமியின் உறவினர்கள் காவல்துறையின்
போக்கை கண்டிக்கும் வகையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அரசுப் பேருந்தின்
கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்பு மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி
கூட்டத்தை கலைத்தனர். இதனைதொடர்ந்து சிறுவன் அசோக் பிரபாகரன் மீதான விசாரணை நடைபெற்று  போக்சோ
சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

POST COMMENTS VIEW COMMENTS