7வயது சிறுமியை கொன்ற பெண் கைது


ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே 7 வயது சிறுமியை கொலை செய்த வழக்கில் பெண் ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த கருமாண்டி செல்லிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முகநாதன். இவரது 7வயது மகள் தனிஷ்கா‌ அப்பகுதியில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார். சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு  சிறுமியை பரிசோதித்‌த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சிறுமியின் கழுத்து, முகம் ஆகிய பகுதியில் காயம் இருந்ததால் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் தனிஷ்காவை, அதே பகுதியை சேர்ந்த வனிதா என்பவர் கொலை செய்தது தெரியவந்தது. வனிதாவின் கணவர் கமலகண்ணனுக்கும், சண்முகநாதன் மனைவிக்கும் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. கமலகண்ணன் தனது குழந்தையை கவனிக்காமல் கனகாவின் குழந்தையை கவனித்து வந்ததால் ஆத்திரமடைந்த வனிதா, தனிஷ்காவின் கழுத்தை நெறித்து கொன்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பெருந்துறை காவல்துறையினர் வனிதாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

POST COMMENTS VIEW COMMENTS