சிறுமியை வெட்டிக்கொன்ற சித்தப்பா சிறையில் அடைப்பு!


ஓமலூர் அருகே ஆசைக்கு இணங்க மறுத்த சிறுமியை, வெட்டிக்கொன்ற சித்தப்பாவை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த அழகேசன் - கஸ்தூரியின் மகள் மீனா. 17 வயதான இவரது, பெற்றோர்கள் இறந்துவிட்டதால் தாத்தா பாட்டி மற்றும் சித்தப்பா வீராசாமி ஆகியோருடன் வசித்துவந்துள்ளார். இந்நிலையில், வியாழக்கிழமை காலை கழுத்தில் வெட்டப்பட்டு வீட்டுக்குள் பிணமாக இறந்து கிடந்தார் மீனா. இதனை தொடர்ந்து தீவட்டிப்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். 

விசாரணையில் திருமணமாகாத வீராசாமி பல இடங்களில் பெண்களிடம் தவறாக நடக்க முயன்று, அடி வாங்கியுள்ளதும் ஊர் ஊராக சுற்றி திரிந்துள்ளதும் தெரியவந்தது. கோவில் திருவிழாவுக்கு வீட்டுக்கு வந்த வீராசாமி, மீனாவிடம் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார். ஆசைக்கு இணங்க மறுத்து மீனா கத்தியுள்ளார். ஆனால், ஒலிபெருக்கி சத்தத்தால், அவர் கத்தியது யாருக்கும் கேட்கவில்லை. ஆத்திரமடைந்த வீராசாமி வீட்டிலிருந்த கொடுவாளை எடுத்து மீனாவின் கழுத்து, தலைப்பகுதி, தோள்பட்டை ஆகிய இடங்களில் வெட்டிவிட்டு தலைமறைவானான் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். தலைமறைவாக இருந்த வீராசாமி கைது செய்யப்பட்டார். வீராசாமி எய்ட்ஸ் நோயால் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

காவல்துறையினர் பாலியல் வன்கொடுமை, போக்சோ, கொலை உட்பட நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அவரை அடைத்தனர்.

POST COMMENTS VIEW COMMENTS