உதவி கேட்ட மாணவியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை: ஹெட்மாஸ்டர் கைது!


படிப்புக்கு உதவி கேட்ட மாணவியை படுக்கைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த தலைமை ஆசிரியர் கைது செய்யப் பட்டுள்ளார்.

ஐதராபாத் அருகிலுள்ள சம்ஷாபாத் பகுதியைச் சேர்ந்தவர் அக்பர் அலி. வயது 45. இங்குள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றுகிறார். இவருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். இவரிடம் படித்த மாணவி சுமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வயது 17. முஞ்சின்டலா கிராமத்தைச் சேர்ந்த இவர், இப்போது இன்டர்மீடியட் படித்து வருகிறார்.

இதில் ஒரு பாடத்தில் அவர் பெயில் ஆகிவிட்டார். இதற்காக அக்பர் அலியிடம் உதவி கேட்டார் சுமதி. அந்த சப்ஜெக்ட்டை நான் சொல்லித்தருகிறேன் என்று உறுதிக்கொடுத்தார் அக்பர் அலி. இதையடுத்து பாடம் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அப்போது மாணவி மீது அக்பர் அலிக்கு ஆசை ஏற்பட்டது. பின்னர் உன்னை திருமணம் செய்துகொள்கிறேன் என்று கூறி, சம்ஷாபாத் பகுதியில் ஒரு மறைவிடத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுபோல் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த அவர், பிறகு திருமணம் செய்துகொண்டார். 

இந்நிலையில் மகளை காணவில்லை என்று சுமதியின் பெற்றோர் தேடியுள்ளனர். அக்பர் அலியிடம் மகள் இருப்பது தெரிந்து கேட்டுள்ளனர். அதற்கு அவர் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம் என்று கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் போலீசில் புகார் செய்தனர். போலீசார் அக்பரை கைதுசெய்தனர். அவர் மீது சிறுமியை கடத்தியது, பாலியல் வன்கொடுமை செய்தது என்பது உட்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

POST COMMENTS VIEW COMMENTS