வங்கிக் கொள்ளையனை பிடிக்க நெல்லை விரைந்தது தனிப்படை 


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் கொள்ளையடித்தவர்களை தேடி தனிப்படை போலீஸ் நெல்லை விரைந்துள்ளது.

கடந்த 7-ம் தேதி மன்னார்குடி அருகே அசேஷம் என்னுமிடத்தில் உள்ள மெர்க்கண்டைல் வங்கிக்குள் நுழைந்த 5 பேர் கும்பல் துப்பாக்கி முனையில் மேலாளர் மற்றும் ஊழியர்களை மிரட்டி ‌ 6 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இதுதொடர்பாக 6 தனிப்படைகள் அமைத்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. சி.சி.டி.வி கேமரா காட்சிகள் பதிவாகும் ஹார்டு டிஸ்க்கை கொள்ளையர்கள் கையோடு எடுத்துச் சென்று விட்டதால் அவர்களை பிடிப்பதில் சிக்கல் நீடிக்கிறது. 

கொள்ளை தொடர்பாக வங்கி ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் மன்னார்குடி டி.எஸ்.பி அசோகன் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் கொள்ளை தொடர்பாக 5 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மன்னார்குடி காவல்நிலையத்தில் வைத்து 5 பேரிடமும் ‌விசாரணை நடந்து வருகிறது. அவர்கள் அளித்த தகவலின் பேரில் தனிப்படை போலீஸ் நெல்லை விரைந்துள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS