நமாஸ் செய்யாத சிறுமி அடித்துக்கொலை: உறவினர்கள் கொடூரம்!


நமாஸ் செய்ய மறுத்த 15 வயது சிறுமி உறவினர்களால் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மும்பை அண்டோப் ஹில்ஸ் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, மும்பை சயான் ஆஸ்பத்திரியில் அனுமதிப்பட்டார். பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்றனர். அவர் உடலில் அடித்துக்கொன்றதற்கான அடையாளங்கள் இருந்தன. கழுத்திலும் காயம் இருந்தது. ஆனால், அந்தச் சிறுமியின் உறவினர்கள், பாத்ரூமில் வழுக்கி விழுந்துவிட்டார் என்று கூறினர்.

சந்தேகமடைந்த டாக்டர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விசாரித்த போது, உறவினர்கள் ஒவ்வொருவரும் முன்னுக்குப் பின் முரணாக தகவல் தெரிவித்தனர். பின்னர் தனித்தனியாக விசாரித்தபோது கொன்றதை ஒப்புக்கொண்டனர்.

அதாவது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கண்டிப்பாக நமாஸ் செய்ய வேண்டும் என்று சிறுமியிடம் சொன்னோம். அவள் கேட்கவில்லை. தொடர்ந்து நாங்கள் வற்புறுத்தியும் அவள் மறுத்துவந்தார். இதையடுத்து நடந்த வாக்குவாதத்தில் அடித்தோம். பின்னர் துப்பட்டாவால் கழுத் தை இறுக்கிக் கொன்றுவிட்டோம் என்று கூறினர். இதையடுத்து அந்தச் சிறுமியின் உறவினர்கள் கைது செய்யப்பட்டனர். 

சிறுமியின் அம்மா சில வருடங்களுக்கு முன் இறந்ததை அடுத்து, உறவினர்கள் வீட்டில் வசித்து வந்தார் சிறுமி. தந்தை வேலைக்குச் சென்று விட்டார். பிறகு இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

‘அவள் நமாஸ் செய்யவில்லை என்றால் என்னிடம் சொல்லியிருக்கலாம். ஆனால், இப்படி கொன்றுவிட்டார்களே?’ என்று சிறுமியின் தந்தை கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. 

POST COMMENTS VIEW COMMENTS