20 ஆண்டுகளாக கொத்தடிமையாக இருந்த கொடுமை - மீட்கப்பட்ட குடும்பம்


திருவண்ணாமலை மாவட்டம்  செய்யாறு  அடுத்த வந்தவாசி வட்டம் தெள்ளார் ஒன்றியத்திற்குட்பட்ட நல்லூர் கிராமத்தில் வசிப்பவர் பெருமாள், அவருக்கு சொந்தமான நிலத்தில் பணி செய்ய அழைத்து வந்து கடந்த 20 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக இருப்பதாக கூறி கோட்டாச்சியர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.


இதன் பேரில் நல்லூர் கிராமத்திற்கு செய்யாறு கோட்டாச்சியர் அரிதாஸ் (பொறுப்பு) தலைமையில் வருவாய்துறையினர் நேரடியாக சென்று விசாரணை செய்தனர். அதிகாரிகள் நடத்திய விசாரணையில் 4 குடும்பங்களை சேர்ந்த 17 பேர் கொத்தடிமைகளாக வசிப்பதாக கூறி அவர்கள் மீட்கப்பட்டனர். எல்லப்பன், வெள்ளிமுத்து, வரதாராஜ், மணி ஆகிய நால்வரின் குடும்பங்களை செய்யாறு கோட்டாச்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் அறிக்கை தயாரித்து 17 பேருக்கும் சான்றிதழ்களை வழங்கினர். நான்கு குடும்பங்களுக்கு தலா 1000 ருபாய் உடனடி நிவாரணம் இரவு 11.00 மணிக்கு வழங்கி இவர்கள் சொந்த ஊரான காஞ்சிபுரம் மாவட்டம் ஆரப்பாக்கம் பகுதிக்கு அனுப்பி வைத்தனர்.விவசாய நில உரிமையாளர் மீது தெள்ளார் காவல்துறையில் புகார் அளித்து காவல்துறை உரிய நடடிவக்கை எடுக்கப்படும் என கோட்டாச்சியர் தெரிவித்தார்.


 

POST COMMENTS VIEW COMMENTS