காவல்நிலையம் அருகே 48 பவுன் களவுப்போன கொடுமை


காவல் கண்கானிப்பாளர் அலுவலகம் அருகே இருந்த வீட்டில் கொள்ளை நடைப்பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் எதிரே தேனீர் கடை நடத்தி வருபவர் ஈஸ்வரன். இவரின்  வீடு  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு ஈஸ்வரன் மற்றும் அவரது மனைவியும் கடையைப் பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்று பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கபட்டு, பீரோக்கள் அனைத்தும் திறக்கப்பட்டு இருந்தது. பதறிப்போன அவர்கள் அவசர அவசரமாக பீரோவை பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 48 பவுன் நகை மற்றும் 30 ஆயிரம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன்  சம்பவ இடத்திற்கு சென்று விசாரனை நடத்தினார். பரபரப்பாக இருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் மிகுவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தேனி நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்


 

POST COMMENTS VIEW COMMENTS