பிரபல ரவுடி ராக்கெட் ராஜா கைது : மடக்கிப்பிடித்த காவல்துறை


காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த முக்கிய ரவுடி ராக்கெட் ராஜா சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை மாவட்டம் ஆணைக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராக்கெட் ராஜா. பிரபல ரவுடியான இவர் மீது பல கொலை, கட்டப்பஞ்சாயத்து வழக்குகள் உள்ளன. காரத்தே செல்வின் என்பவரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த வழக்கு ஒன்று, எழும்பூர் காவல்நிலையத்தில் ராக்கெட் ராஜா மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று இன்னும் பல வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக ராக்கெட் ராஜா இருந்து வந்தார். 

இந்நிலையில் தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் ராக்கெட் ராஜா பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. ரகசிய தகவலின் அடிப்படையில் தியாகராய நகர் துணை ஆணையர் அரவிந்தன் தலைமையிலான தனிப்படையினர், நட்சத்திர விடுதியில் சோதனை நடத்தினர். அப்போது, ராக்கெட் ராஜா உள்ளிட்ட 5 பேரும் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் 5 பேரிடமும் விசா‌ணை நடைபெற்று வருகிறது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை கொலை செய்யும் நோக்கிலேயே, ராக்கெட் ராஜா சென்னையில் பதுங்கியிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS