காதலிப்பதாகக் கூறி 2 மாதமாக பாலியல் வன்கொடுமை: இளைஞர் கைது


15 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி இரண்டு மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவை பாப்பநாயகன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுமதி. 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு வீட்டில் இருந்துள்ளார். கடந்த சில நாட்களாக சிறுமி சோர்வாக காணப்பட்டுள்ளார். சந்தேகமடைந்த பெற்றோர்கள் அவளிடம் விசாரித்துள்ளனர். பின்னர், சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், சிறுமியிடம் விசாரித்துள்ளனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த தீனதயாளன் என்ற இளைஞர் காதலிப்பதாகக் கூறி சிறுமியை இரு மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. 

இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில், தீனதயாளனை கோவை மத்திய அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர். டிப்ளோமா முடித்து விட்டு கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார் தீனதயாளன். வீட்டில் பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

POST COMMENTS VIEW COMMENTS