‘பணம் தரல உன்ன கொன்னுடுவேன்’ - டாக்டரை மிரட்டிய மர்ம நபர்!


சென்னை கானாத்தூரைச் சேர்ந்த பல் மருத்துவர் ஹரீஷ் என்பவரை ஒரு லட்சம் ரூபாய் தராவிட்டால் கொலை செய்து விடுவேன் என்று மர்மநபர் ஒருவர் தொலைபேசியில் மிரட்டும் ஆடியோ வெளியாகி உள்ளது. அந்த ஆடியோவில், ‘கேட்குற காசை கொடுத்துட்டு நிம்மதியா இரு, இல்லனா நீ எல்லாத்தையும் இழக்குற நிலை ஏற்படும். உனக்கு என்ன வேணும்னாலும் நடக்கும். ரூ.1 லட்சம் கொடுத்துவிடு. இல்லனா உன்னை போட்டுடுவேன். சில பேர் பணத்த கொடுக்குற மாதிரி சொல்லிட்டு, போலீஸ் கிட்ட போயிடுவாங்க. அப்புறம் பணத்தை வாங்க வர நேரத்துல, போலீஸ் பொறி வச்சு பிடிச்சுடுவாங்க. உன்ன போட்டுத்தள்ள திட்டம் போட்டாச்சு. பணம் கொடுப்பியானு பார்ப்பேன் இல்லனா, போட்டுட்டு போயிட்டே இருப்பேன்’ என மிரட்டுகிறார்.

எதிர்தரப்பில் பேசிய மருத்துவர், ‘என்னிடம் தற்போது ரூ.1 லட்சம் இல்லை. உடனே என்னால் அத்தகைய பெரிய தொகையை திரட்ட முடியாது. நேரம் வேண்டும். பணத்தை கொடுத்த அப்புறம் மறுபடியும் பணம் கேட்டு தொல்லை பண்ணமாட்டிங்கனு எப்படி நம்புறது. பணத்தை நாளை தருகிறேன். நாளை மாலை நேரில் வந்து வாங்கிக்கோ’ என கூறுகிறார். இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது. ஊடகங்களும் இதை செய்தியாக வெளியிட்டுள்ளன. 

POST COMMENTS VIEW COMMENTS