தினமும் பாலியல் தொல்லை: 45 வயது பெண் மீது 17 வயது மாணவன் பகீர் புகார்!


தனக்கு பாலியல் தொல்லைக் கொடுப்பதாக 45 வயது பெண் மீது பத்தாம் வகுப்பு மாணவன் கொடுத்துள்ள புகார், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் டப்பிங் ஸ்டூடியோ ஒன்றை தனது மனைவி சுமதியுடன் நடத்தி வருகிறார் துரை (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. கடந்த மூன்று வருடத்துக்கு முன் நிகழ்ச்சி ஒன்றுக்காக, கேரளா சென்றிருந்தனர் இவர்கள். அப்போது ஏழை குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவனைச் சந்தித்துள்ளனர். அவர்கள் அவன் படிப்புக்கு தாங்கள் உதவுவதாகவும் சென்னையில் வந்து படிக்கலாம் என்றும் கூறினர். அதன்படி அந்தப் பையன் சென்னை வந்தான். இவர்கள் ஸ்டூடியோவிலேயே தங்கி பள்ளிக்குச் சென்றுவந்தான்.

இந்நிலையில் குழந்தைகள் நல பாதுகாப்புக் குழுவுக்கு (Child Welfare Committee) அந்தச் சிறுவன், கடந்த மாதம் 24-ம் தேதி ஃபோன் செய்தான். அதில், தன்னை சுமதி தினமும் பாலியல்  ரீதியாகத் துன்புறுத்துவதாகவும், தனக்கு ஆபாசப் படங்களையும் வீடியோவையும் அனுப்பி வைப்பதாகவும், தான் சென்றால் தன்னை தவறான நோக்கத்தில் தொட்டுப் பேசுவதாகவும் புகார் கூறினான். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த குழந்தைகள் நல பாதுகாப்பு குழு, சிறுவனின் புகாரை சிபிசிஐடி போலீசுக்கு மாற்றியுள்ளது.

இதுபற்றி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ், அந்த டப்பிங் ஸ்டூடியோவின் உரிமையாளர் துரையிடம் விசாரித்தபோது, ‘அந்த சிறுவனின் நடத் தை சரியில்லை. வீட்டில் வேலைப் பார்க்கும் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றான். இதையடுத்து அந்தப் பெண் விருகம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுவனின் உடைமைகளை சோதனையிட்டோம். அப்போது ஆபாசப் படங்களும் ஆணு  றைகளும் இருந்ததைக் கண்டு ஆச்சரியமடைந்து நாங்களும் புகார் கொடுத்துள்ளோம்’ என்றார்.


விருகம்பாக்கம் போலீசில் விசாரித்தபோது இது தொடர்பாக புகார் வந்திருப்பதை உறுதி செய்தனர். இதுபற்றி மேலும் விசாரணை நடந்து வருகிறது. 
 

POST COMMENTS VIEW COMMENTS