பாஜக பிரமுகர் மீது திடீர் தாக்குதல்: காது சவ்வு கிழிந்தது ! 


சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள தாரமங்கலம் கோணகாபடி கிராமத்தை சேர்ந்தவர் அச்சுதன். 36-வயதான இவர் தாரமங்கலம் ஒன்றிய பாஜக தலைவராக செயல்பட்டு வருகிறார். இவர் நேற்று மாலை கோணகாபாடியில் இருந்து தனது காரில் தாரமங்கலம் வந்துள்ளார். அப்போது தாரமங்கலம் சேர்ந்த காவேரி என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். திடீரென காரின் முன்னாள் வந்து நின்ற காவேரி, காரை நிறுத்தியுள்ளார். தொடர்ந்து என் மீது மோதுவது போல் ஏன் காரை ஒட்டினாய் என்று கீழே இழுத்துப் போட்டு அடித்து உதைத்துள்ளார். மேலும், பாஜக ஒன்றிய தலைவர் அச்சுதன் பதில் கூட பேச விடாமல் கண்ணத்தில் மாறி மாறி அடித்ததுடன், ஓங்கி காதின் மீது அடித்துள்ளார். இதில், பாஜக ஒன்றிய செயலாளர் அச்சுதனின் காது சவ்வு கிழிந்தது. மேலும், அங்கேயே அச்சுதன் மயக்கமடைந்து கீழே விழுந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அச்சுதனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே நடந்த சம்பவம் குறித்து பாஜக ஒன்றிய செயலாளர் அச்சுதன் தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும், பாஜக சார்பிலும் கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய காவிரியை தேடி வருகின்றனர்.


 

POST COMMENTS VIEW COMMENTS