ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு !


சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே குன்றக்குடியை சேர்ந்தவர் பாஸ்கரன். குன்றக்குடியில் நுட வைத்தியசாலை நடத்தி வரும் இவர் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ஆவார். பாஸ்கரன் சில நாள்களுக்கு முன்பு வெளியூர் சென்றுள்ளார், அவரது குடும்பத்தார்கள் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவில்,பாஸ்கரன் விட்டிற்குள் இருந்து தீ பற்றி எரிந்துள்ளதை கண்ட அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் ஓடிச் சென்று தீயை அணைத்துள்ளனர். பின்பு காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, பாஸ்கரன் வீட்டிற்கு வந்து ஆய்வு செய்த குன்றக்குடி ஆய்வாளர் ஆத்மநாதன், காரைக்குடி காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர்.


விசாரணையில் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிறிய மது பாட்டிலில் பெட்ரோல் குண்டு வீசி விட்டு சென்றுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து, குன்றக்குடி காவல்துறையினர் சம்பவம் நிகழ்த்தி விட்டு தப்பி சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

POST COMMENTS VIEW COMMENTS