இளம் பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: வீடியோவை வெளியிட்ட கொடூரர்களுக்கு வலை!


இளம் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து அந்த வீடியோவை வெளியிட்ட கொடுமைக்காரர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில் உள்ளது சமதான் என்ற பகுதி. இந்தப் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர், கடந்த 24-ம் தேதி சில நாட்களுக்கு முன் கிணற்றுக்கு தண்ணீர் எடுக்கச் சென்றார். அங்கு வேறு யாரும் இல்லை. இதைப் பயன்படுத்திக்கொண்ட, அதே பகுதியைச் சேர்ந்த தலிப், சல்மான் என்ற இளைஞர்கள், அந்தப் பெண்ணை சுற்றி வளைத்தனர். தங்கள் ஆசைக்கு இணங்கும்படி கூறினர். அவர் மறுத்து கத்தியபடி ஓட முயன்றார். உடனே அவர்கள் அந்தப் பெண்ணை பிடித்து, மிரட்டி மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்தனர். அதை வீடியோவும் எடுத்தனர். பின்னர் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இந்தச் சம்பவத்தை வீட்டில் சொன்னால், தனக்குத்தான் பாதிப்பு என்று நினைத்த அந்த இளம்பெண், சொல்லவில்லை. 

இந்நிலையில் பாலியல் வன்கொடுமை செய்த இருவரும் அந்த வீடியோவை வாட்ஸப் குரூப்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றினர். இந்த வீடியோ அங்கு வைரலானது. இதைக் கண்டு உள்ளூர்காரர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டில் தெரிவித்தனர். அவர்கள் அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து உடனடியாக போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த இரு இளைஞர்களையும் தேடி வருகின்றனர்.

பாதிக்கப்பட்டப் பெண்ணின் சகோதரி கூறும்போது, ‘இப்படிப்பட்ட கொடுஞ்செயலை செய்த அவர்கள் இருவரும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்’ என்று தெரிவித்தார். உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிரிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

POST COMMENTS VIEW COMMENTS