சிதைந்த நிலையில் பெண் சடலம் மீட்பு


சென்னையில் அடையாளம் தெரியாத பெண் உடல் சிதைந்து, மண்டை ஓடு தெரியும் நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சென்னை பழைய பெருங்களத்தூர் குளக்கரை அருகே அடர்ந்த முள் புதர் உள்ளது. இப்பகுதியில் உடலில் புடவை சுற்றியவாறு உடல் சிதைந்த நிலையில் மண்டை ஓட்டுடன் ஒரு பெண்ணின் உடல் இருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பீர்க்கண்கரணை  காவல்துறையினர் முற்றிலும் சிதைந்து மண்டை ஓடும், எலும்பு கூடுமாக கிடந்த உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.அடையாளம் தெரியாத பெண் உடல் மண்டை ஓடாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அறிந்த மக்கள் அதை பார்க்க குவிந்ததால் பரபரப்பு நிலவியது.

இதுதொடர்பாக காவல்துறையினர் கூறுகையில், உடல் சிதைந்த நிலையில் மண்டை ஓட்டுடன் கண்டெடுக்கப்பட்ட பெண்ணுக்கு சுமார் 45 வயது இருக்கும். இறந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு மேலாக இருக்கலாம் எனத் தெரிகிறது. உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையை காணும் போது யாரேனும் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். 

POST COMMENTS VIEW COMMENTS