பயணிகளோடு ஆம்னி பஸ் கடத்தல்: டுபாக்கூர் போலீஸ்காரர்கள் அதிரடி கைது


போலீஸ் எனக்கூறி பயணிகளுடன் ஆம்னி பஸ்சை கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

பெங்களூரில் இருந்து கேரள மாநிலம் கண்ணூருக்கு லாமா டிராவல்ஸை சேர்ந்த ஆம்னி பஸ் ஒன்று நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு சென்றது. அதில் 10 பெண்கள் உட்பட 42 பயணிகள் இருந்தனர். மைசூர் சாலையில் பஸ் சென்று கொண்டிருந்த போது, 7 பேர் கொண்ட கும்பல் மறித்தது.

தாங்கள் மத்திய குற்றப்பிரிவு போலீஸ்காரர்கள் எனக்கூறி பஸ்சின் ஆவணங்களை கேட்டுள்ளனர். பின்னர் டிரைவரை கீழே இறங்கச் சொல்லிவிட்டு அதில் ஒருவர் பஸ்சை ஓட்டத் தொடங்கினர். பட்டனகெரே என்ற இடத்துக்கு பஸ்சை கொண்டு சென்று தனியார் பார்க்கிங் இடத்தில் நிறுத்தினர். பஸ்சில் இருந்தவர்களுக்கு லேட்டாகத்தான், தாம் கடத்தப்பட்டிருக்கிறோம் என்பது தெரியவந்தது. 3 நேரமாக அவர்கள் அங்கு மாட்டிக்கொண்டனர். இந்நிலையில் ஒருவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். 

இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து பயணிகளையும், பஸ்சையும் மீட்டனர். மேலும், பஸ் கடத்தலில் ஈடுபட்டவர்களில் 4 பேரை கைது செய்தனர். மேலும் 3 பேர் தப்பி ஓடிவிட்டனர். லாமா டிராவல்ஸ் நிறுவனம் பைனான்ஸ் நிறுவனம் ஒன்றில் பணம் வாங்கியிருக்கிறது. பணத்தைத் திருப்பிக் கொடுக்காததால், பஸ்சை கடத்தியது விசாரணையில் தெரிய வந்தது. இந்த கடத்தலில் தொடர்புடைய மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 

POST COMMENTS VIEW COMMENTS