“தியேட்டரில் ஷோ வாங்குறது கஷ்டமா இருக்கு..” - தயாரிப்பாளர் புலம்பல்!


நாளை ரிலீஸ் ஆக உள்ள திரைப்படங்கள் தொடர்பாக தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் சூசகம் தெரிவித்துள்ளார்.

நாளை தினம் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘சீமராஜா’ திரைப்படம் வெளியாகிறது. இதில் சமந்தா கதாநாயகியாக நடித்துள்ளார். அத்துடன் நாளைய தினம் ‘யு டேர்ன்’ என்ற த்ரில்லர் படமும் வெளியாகிறது. இதிலும் சமந்தா நடித்துள்ளார். இந்நிலையில் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், “ ஒரு பெரிய படம் மட்டுமே ரிலீஸ் ஆகும் இந்த வாரம், இன்னொரு ஓரளவு எதிர்பார்ப்பு உள்ள சிறிய பட்ஜெட் படத்திற்கு மல்டிபிளக்ஸ்ல ஷோ வாங்க கஷ்டமா இருக்கு. இந்த லட்சணத்தில செப்டம்பர் 21, 28 தேதிகளில பெரிய படங்களுடன், வரவிருக்கும் சிறிய பட்ஜெட் படங்களுக்கு ஷோ எப்படி கிடைக்கப் போகுது? தெரியலே!” எனக் கூறியுள்ளார். 

POST COMMENTS VIEW COMMENTS