இளம் நடிகர்களை அலற வைத்த ‘சிக்ஸ்பேக்’ சூரி


நடிகர் சூரியின் சிக்ஸ்பேக் புகைப்படத்தை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகர் சூரி. பரோட்டா சூரி என்றால் அனைவருக்கும் தெரியும் என்றளவிற்கு தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர். இதனால் சமீபகாலமாக பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து காமெடி செய்யும் அளவிற்கு அவரின் செல்வாக்கு உள்ளது.

இந்நிலையில் நடிகர் சூரியின் சிக்ஸ்பேக் புகைப்படத்தை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “ சிக்ஸ்பேக் சூரியின் 8 மாத கடின உழைப்பிற்கு கிடைத்த பலன். இந்தப் புகைப்படத்தை பகிர்வதில் உண்மையிலே மகிழ்ச்சி அடைகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘சீமராஜா’ திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இப்படத்தின் முக்கிய வேடத்தில் சூரியும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

POST COMMENTS VIEW COMMENTS