தனுஷின் ஹாலிவுட் படத்துக்கு சர்வதேச விருது


நடிகர் தனுஷ் நடித்துள்ள ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்’ படம் நார்வே திரைப்பட விழாவில் விருது வென்றுள்ளது. 

நடிகர் தனுஷ் முதல்முறையாக நடித்துள்ள ஹாலிவுட் திரைப்படம் ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர். கென் ஸ்காட் இயக்கத்தில் இந்தியா, பிரான்ஸ், இத்தாலி, லிபியா என நான்கு நாடுகளில் படமாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது. 

               

அந்தவகையில், நார்வே திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்’ படத்திற்கு 'The Ray of Sunshine' விருது கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி, இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது எனவும் தேர்வுக்குழுவினர் பாராட்டியுள்ளனர். இந்த தகவலை திரைப்படத்தின் இயக்குநர் கென் ஸ்காட் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

              

முன்னதாக, தனுஷ் நடித்துள்ள ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்’ கடந்த மே மாதம் ரிவியேராவில் நடைப்பெற்ற கேன்ஸ் 2018 திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அதில், தனுஷ் படக்குழுவினருடன் கலந்து கொண்டார். 

     

இந்தப் படத்திற்கு தமிழில் ‘வாழ்க்கையை தேடி நானும் போனேன்’ என்று வைக்கப்பட்டுள்ளது. இந்த வரிகள் தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’ பட பாடலில் இடம் பெற்றவை. ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இப்படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. 

POST COMMENTS VIEW COMMENTS