அக்டோபர் 4ல் திரைக்கு வருகிறது ‘96’


விஜய் சேதுபதி த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள 96 திரைப்படம் அடுத்த மாதம் 4ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

விஜய்சேதுபதி, த்ரிஷா முதன்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘96’. இதில் விஜய்சேதுபதி 16 வயது, 36 வயது மற்றும் 96 வயது என மூன்று தோற்றங்களில் நடித்துள்ளார். இதனை `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சி.பிரேம்குமார் இயக்கியுள்ளார். இவர் முதன்முறையாக இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். 

இப்படத்தில் ஜனகராஜ், காளி வெங்கட், வினோதினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதன் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டீஸர் கடந்த ஜூலை 12ம் தேதி வெளியானது. டீஸருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேபோல், 96 பட பாடல்களும் இளைஞர்களின் இதயங்களை கொள்ளை கொண்டு விட்டது. 

         

இந்நிலையில், 96 படம் வெளியாகும் தேதி இன்று மாலை 7 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது. அக்டோபர் 4ல் படம் வெளியாகிறது. இந்த தகவலை விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இதனிடையே, 96 படத்திற்கான தெலுங்கு ரீமேக்கில் நானி, சமந்தா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கான  தெலுங்கு உரிமையை தயாரிப்பாளர் தில் ராஜு ஒப்பந்தம் செய்துள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS