ஜோதிகா நடிக்கும் புதிய பட அறிவிப்பு


‘காற்றின் மொழி’ திரைப்படத்தை தொடர்ந்து ஜோதிகா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

காற்றின் மொழி, செக்கச் சிவந்த வானம் உள்ளிட்ட திரைப்படங்களில் ஜோதிகா நடித்து வருகிறார். அதில், செக்க சிவந்த வானம் வெளியீட்டுக்கு தயராகிவிட்ட நிலையில், காற்றின் மொழி படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில் ஜோதிகா நடிக்கும் கதாநாயகியை மையப்படுத்தி புதியதாக தயாராகும் படத்தினை அறிமுக இயக்குநர் எஸ்.ராஜ் இயக்கவுள்ளார். காற்றின் மொழி படத்தைத் தொடர்ந்து ஜோதிகா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்கும்.

இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் நடிகர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜோதிகா நடிப்பில் எஸ்.ராஜ் இயக்கும் இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர் நிறுவனம் தயாரிக்கிறது. 

POST COMMENTS VIEW COMMENTS