இயக்குனர், வசனகர்த்தா பிருந்தா சாரதிக்கு விருது!


திரைப்பட இயக்குனரும் வசனகர்த்தாவுமான பிருந்தா சாரதி எழுதிய கவிதை நூலுக்கு படைப்புக் குழுமம் வழங்கிய விருது கிடைத்துள்ளது.

ஜீவா, ஸ்ரீதேவி விஜயகுமார், ஸ்ருத்திகா நடித்த ’தித்திக்குதே’ படத்தை இயக்கியவர் பிருந்தாசாரதி. லிங்குசாமி இயக்கிய ’ஆனந்தம்’ , ’பையா’, ’வேட்டை’, ’அஞ்சான்’ ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். இவர் கவிஞரும் கூட. ஏராளமான கவிதை நூல்களை வெளியிட்டு ள்ளார். இவரது ’எண்ணும் எழுத்தும்’  என்ற கவிதை நூலுக்கு படைப்புக் குழுமம் வழங்கும் விருது கிடைத்துள்ளது. 2017-ம் ஆண்டுக்கான சிறந்த கவிதை நூலுக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. 

Read Also -> பார்வையற்ற பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு திருமண நிச்சயதார்த்தம்!  

Read Also -> நடிகர் சென்றாயனுக்கு ’திருமந்திரம்’ பரிசளித்த சிம்பு!  


சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்த விழாவில் இந்த விருதை கவிஞர் மு.மேத்தா, பிருந்தா சாரதிக்கு வழங்கினார். கவிஞர் தமிழச்சி தங்க பாண்டியன், கவிஞர் ஆரூர் தமிழ்நாடன், பேராசிரியர் பி. மூ. மன்சூர் மற்றும் படைப்பு குழும நிர்வாகி முகம்மது அலி ஜின்னா உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.

POST COMMENTS VIEW COMMENTS