நடிகர் சென்றாயனுக்கு ’திருமந்திரம்’ பரிசளித்த சிம்பு!


நடிகர் சென்றாயனுக்கு நடிகர் சிம்பு திருமந்திரம் புத்தகத்தை பரிசளித்துள்ளார்.

பொல்லாதவன், ஆடுகளம், மூடர் கூடம், ரவுத்திரம், இவனுக்கு தண்ணியில கண்டம் உட்பட பல படங்களில் நடித்தவர் சென்றாயன். காமெடி, வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துவரும் சென்றாயன், தனியார் தொலைக்காட்சியில் இடம்பெறும் ‘பிக் பாஸ் 2’ -வில் பங்கேற்றார்.

Read Also -> இயக்குனர், வசனகர்த்தா பிருந்தா சாரதிக்கு விருது! 

அந்த நிகழ்ச்சியில் இருந்து அவர் சமீபத்தில் வெளியேறிவிட்டார். வெளியேறிய அவர் நேராக சென்று நடிகர் சிம்புவை சந்தித் துள்ளார். இருவரும் பல விஷயங்களை பேசியுள்ளனர். 

Read Also -> பார்வையற்ற பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு திருமண நிச்சயதார்த்தம்! 

பின்னர் சிம்பு, அவருக்கு திருமூலரின் ’திருமந்திரம்’ புத்தகத்தை கையெழுத்திட்டு பரிசளித்துள்ளார். அப்போது நடிகர் மஹத்தும் உடன் இருந் துள்ளார். அந்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் மஹத்.


 

POST COMMENTS VIEW COMMENTS