மலைக்காவும் வித்யா பாலனும் 40 வயசுல நச்சுன்னு இல்லையா? கேட்கிறார் பூமிகா!


தமிழில் பத்ரி, ரோஜாகூட்டம், சில்லுனு ஒரு காதல் உட்பட சில படங்களில் நடித்தவர் பூமிகா சாவ்லா. கன்னடம், தெலுங்கு இந்தி படங்களிலும் நடித்துள்ள இவர், 2007 ஆம் ஆண்டு தனது காதலர் பரத் தாகூரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். இதையடுத்து அவர் படங்களில் நடிப்பதை குறைத்தார். அதிக வாய்ப்புகளும் வரவில்லை. இந்நிலையில் சமந்தா நடித்துள்ள ’யு டர்ன்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் பூமிகா. 

Read Also -> நடிகர் சென்றாயனுக்கு ’திருமந்திரம்’ பரிசளித்த சிம்பு!

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘இந்த படத்தில் குறைந்த காட்சிகளில் வந்தாலும் நிறைவான கேரக்டர். இதுவரை இப்படி யொரு கேரக்டரில் நடிக்கவில்லை. தொடர்ந்து இதுபோன்ற வித்தியாசமான கேரக்டரை எதிர்பார்க்கிறேன். 40 வய்து ஆகிவிட்டால் இங்கு நடிகைகளை அக்கா, அண்ணி, அம்மா கேரக்டரில் நடிக்க அழைக்கிறார்கள். 40 வயது என்பது முடிவல்ல. அந்த வயதிலும் நடிகைகள் இளமை யாகவும் ஹாட்டாகவும் இருக்கிறார்கள். இந்தி நடிகை வித்யா பாலனை பாருங்கள். அவருக்கு நாற்பது வயதுக்கு மேலாகிறது.

Read Also -> இயக்குனர், வசனகர்த்தா பிருந்தா சாரதிக்கு விருது!  

இன்னும் நல்ல கேரக்டர்களில் நடித்து வருகிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடிக்கிறார். அதே போல மலைக்கா அரோராவும் நாற்பது வயதைத் தாண்டியவர்தான். இன்னும் அவர் பாலிவுட்டின் ஹாட் நடிகையாக இருக்கிறார். அதே போன்ற மாற்றம் இங்கும் வரும் என்று நம்புகிறேன். நாற்பது வயதுக்கு ஏற்ப நடிகைகளுக்கும் கதைகளை உருவாக்க வேண்டும்’ என்றார்.

POST COMMENTS VIEW COMMENTS