ரஜினியின் 'பேட்ட' இசை காப்பியடிக்கப்பட்டதா? - ரசிகர்கள் அதிர்ச்சி


'பேட்ட' திரைப்படத்தின் மோஷன் போஸ்டரில் இடம்பெற்ற பின்னணி இசை, பிரபல ஹாலிவுட் திரைப்படமான 'பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன்' படத்தின் தீம் இசையின் சாயலில் இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

Read Also -> பார்வையற்ற பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு திருமண நிச்சயதார்த்தம்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. அதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்த அதே வேளையில், அதில் இடம்பெற்றிருந்த பின்னணி இசை, 'பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன்' படத்தின் தீம் இசையினை ஒத்திருப்பதாக இணையத்தில் பல வீடியோக்கள் பரவி வருகின்றன. ரஜினிகாந்துக்காக அனிருத் இசையமைத்திருக்கும் முதல் படம் 'பேட்ட' ஆகும்.

Read Also -> ரஜினியின் 2.0 படத்துக்கு இவ்வளவு செலவா ? அசந்துப்போன ரசிகர்கள்  

இதனிடையே சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சொந்தமான ஸ்டுடியோவில் ‘பேட்ட’ ஷூட்டிங் நடைபெற்று வருவதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது.

POST COMMENTS VIEW COMMENTS